Posts

Showing posts from January, 2021

என்னவளே

 என்னவளை எண்ணி ஏக்கத்தில் நான் கிறுக்கும் சிறு கிறுக்கல்கள்...  எத்தனை திங்கள்கள்  காத்திருந்தேன், இத்திங்களை கரம் பிடிப்பதற்கு.. பிடித்த கரம்  பிரிக்க மனமில்லாமல், என் நிழலாய்  என்னை தொடர்கிறாய்..  தொடரும் நிழல்கூட இருளில் மறைந்துவிடும்,  நீ காட்டும் அன்பு  ஒருபொழுதும் என்னைவிட்டு மறையாதடி...  நம்வாழ்வில்  ஒருவரை ஒருவர்  பிரிந்துவிடக்கூடுமோ  என்றையத்தில்  அடுக்கடுக்காய் சிறு சண்டைகளேனே? அடம்பிடிக்க அறிந்த உனக்கு,  என் அடிமனம்  ஏன் அறியவில்லை.. இன்று மட்டுமல்ல என்றும் நான்  உன்னவன்தான்  ஓராண்டு ஆகியும்  உன்னருகில் நான்  இல்லையென்று எண்ணுகையில் கண்ணருகே தல காவிரியும்  தோன்றுதடி  எத்தனை இரவுகள்  தனிமையில் தவித்தாலும் , ஆருதலாய் வந்துவிடும்  உன்நினைவு  போதுமடி நம் தனிமை...  நம் காதலை சுவாசிக்க  நீ வேண்டும் என்னருகில்..  என் சுவாசம் என்றும் நீ உள்ளவரை மட்டுமே..