நானும் அவளும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளில்லை என்றாலும், நானும் அவளும் அண்ணன் தங்கை தான். வார்த்தை தவறாமல் அண்ணா அண்ணா என்றவள், இப்போது உரிமையில் வாடா போடா என்று அன்பாய் சண்டை போடுகிறாள்.. உரிமையாய் கோவப்படுகிறள், அதடுகிறாள், மொத்தத்தில் என் கண்ணை, சந்தோசத்தில் கலங்க வைக்கிறாள். அன்பானவர்களை விட்டு விலக நினைக்கும் மனம் தான், இவளை பேச சொல்லி ரசிக்கிறது. அவள் தோள்களில் சாய்ந்து தூங்கையில், அவள் கீழே சாயும் முன், என் கை என்னை அறியாமல் விரைகிறது, அவளை தாங்கி கொள்ள.. மொத்தத்தில் இனம் புரியாத ஒர் உணர்வு என்னுள்.. இவ்வுணர்வை நீ புரிந்து கொள்ள நீயும் அண்ணனாக வேண்டும்.
Posts
Showing posts from January, 2019
- Get link
- X
- Other Apps
மகளே, நான் எங்கே இருந்தாலும், என்னுயிர் உன்னோடுதான். என் தாயாக அரவணைக்க உன் அம்மா வந்தாள், உன் அன்னையை போல அன்பு காட்ட நீ வந்தாய்.. உருவம் மாறினாலும் உங்களின் அன்பு மட்டும் மாரவில்லையடி. கண்ணுக்குள் நீ இருப்பதால், கண்ணீரும் தயங்குதடி. காத்திருந்தது போதும்மடி, அன்பாய் ஒரு முத்தம் கொடுப்பாயா..! நான் விரும்பும் ஒரு வரி கவிதையை நீ "அப்பா" என்று சொல்லிவிட ஆசையாய் காத்திருக்கிறேன்.