Posts

அழகான  தருணங்கள் மட்டுமே  அழகான வாழ்விற்கு  வழி வகுக்கும் 

என்னவளே

 என்னவளை எண்ணி ஏக்கத்தில் நான் கிறுக்கும் சிறு கிறுக்கல்கள்...  எத்தனை திங்கள்கள்  காத்திருந்தேன், இத்திங்களை கரம் பிடிப்பதற்கு.. பிடித்த கரம்  பிரிக்க மனமில்லாமல், என் நிழலாய்  என்னை தொடர்கிறாய்..  தொடரும் நிழல்கூட இருளில் மறைந்துவிடும்,  நீ காட்டும் அன்பு  ஒருபொழுதும் என்னைவிட்டு மறையாதடி...  நம்வாழ்வில்  ஒருவரை ஒருவர்  பிரிந்துவிடக்கூடுமோ  என்றையத்தில்  அடுக்கடுக்காய் சிறு சண்டைகளேனே? அடம்பிடிக்க அறிந்த உனக்கு,  என் அடிமனம்  ஏன் அறியவில்லை.. இன்று மட்டுமல்ல என்றும் நான்  உன்னவன்தான்  ஓராண்டு ஆகியும்  உன்னருகில் நான்  இல்லையென்று எண்ணுகையில் கண்ணருகே தல காவிரியும்  தோன்றுதடி  எத்தனை இரவுகள்  தனிமையில் தவித்தாலும் , ஆருதலாய் வந்துவிடும்  உன்நினைவு  போதுமடி நம் தனிமை...  நம் காதலை சுவாசிக்க  நீ வேண்டும் என்னருகில்..  என் சுவாசம் என்றும் நீ உள்ளவரை மட்டுமே..

இதுதான் காதலோ

 எந்தன் இதயம்..  என்னருகில் நீ இருந்தால்..   சுவாசிக்க மறக்கின்றன.. உந்தன் நினைவிருந்தால்..  சுவாசிக்க மறுக்கின்றன. இதுதான் காதலோ
வாழ்கையில் , "நிம்மதி" எங்கே என்று நாம்  தேட தொடங்கும்  முன்பே, இந்த வாழ்க்கை "நீ  மதி(கெட்டவன்)" என்று முடித்துவைக்கிறது. 
இம்மண்ணில் பொய்யான காதல் என்று எதுவும் இல்லை..  எல்லாம் அவரவர் பார்க்கும் விதத்தில் தான்  இருக்கிறது.. நானும் கண்டதில்லை அப்படியோர் காதலை.. உந்தன் அன்பை தவிர..  
கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட - அவனை நொடிக்கொருமுறை நினைக்க வைத்துவிடுகிறது. நாம் ஒருவர்மீது கொண்ட அன்பு.. 
எந்தன் நினைவுகளில் கூட, உந்தன் முகம் நிறைத்ததால் என்னவோ.. எந்தன் நிழல்கூட நீயாய் தெரிகிறாய்