Posts

Showing posts from April, 2019
அட மதிகெட்ட இதயமே சிறிது நேரமாவது  துடிக்காமல் இருப்பாயா, சிறிது நேரமாவது அவள் அமைதியாக உறங்கட்டும் எந்தன் இதயத்தில்..
உன் சுவாசம்படும் தூரத்தில் நீ இருத்தலும், இன்னும் ஏன் தொலைவில் இருக்கிறாய் என்று சொல்ல வைக்கிறது இந்த மதிகெட்ட பாசம் 
நீ மட்டும் எப்படி அறிகிறாய், உன்னை நான் நினைக்கும் போதெல்லாம், என் அருகில் வந்து விடுகிறாயே..
உந்தன் அழகான சிரிப்பில் என்னை நீ கொள்வாய் என்றால், அச்சிரிப்பிற்காக,  நான் ஓராயிரம் முறை இறக்கவும் தயார் 
உந்தன் திருட்டு பார்வையில், என் இதயத்தை திருடிவிட்டாய். போதுமடி உந்தன் பார்வை, இனியும் திருட என்னிடம் வேறு இதயம் இல்லையடி.. இருப்பதும் உன்னிடம்தான் இருக்கிறது என்பதை மறவாதே 
உன்னிடம் அழகான பொய்கள் சொல்லும் என் உதடுகள்தான், உன் பெயரை ஓயாமல் சொல்லவும் ஆசைபடுகிறது, என்பதை மறவாதே காதலியே.. 
முன்ஜென்மத்தில், உன் இதழ்கள் என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. இன்று என்னுடன் மாட்டிக்கொண்டு தவிக்கிறது 
அன்பே, சிறிது நேரமாவது என்னை நினைக்காமல் இருப்பாயா.. உன்னால் வரும் விக்களில் நான் இறந்துவிடுவேனோ  என்ற பயத்தில் கேட்கிறேனடி 
ஆயிரம் மரங்களின் நடுவில் இருத்தலும்,  உன்னைப்பார்க்கும் தருணங்களில். ஏனோ தெரியவில்லை.! என் சுவாசத்திற்கும்  கூட பஞ்சம் வந்துவிடுகிறது
இமைப்பது என் இமைகளின்  வேலை என்றாலும், இமைக்க விடாமல் பார்த்துகொள்வதில் உன் விழிகளின் வேலையாக உள்ளதடி..