Posts

Showing posts from August, 2018
Image
எதற்கு பிரிந்தோம்மென்று காரணம் அறியவில்லை,. ஆண்டுகள் பல கடந்தபின்னும், உன் நினைவுகள் மட்டும் இன்றும் மறக்கவில்லை. என்றோ நாம் பயணித்த பேருந்தை கண்டதும், ஒரு நொடி பொழுது கண்ணெதிரில் தோன்றினாய். அக்கணத்தை என்னவென்று உரைப்பதடி... என்றோ உன்னக்காக மறந்த என் புன்னகையும், மகிழ்ச்சியையும், மீண்டும் என்னுள் ஊனர்த்தேன்னடி.. உன் நினைவுகளுடன் அப்பேருந்து சுமந்து சென்ற ஒவ்வொரு தொலைவும், உன் நினைவின் ஆழத்தை, என் விழிகளில் கசிந்த கண்ணீரும் சொல்லும்மடி.. தெரிந்தவர்கள் பார்த்து விடுவார்களோ... என்ற பயதினில் பயணித்தது, யாரும் அறியாமல் என் கையைப்பற்றி கொண்டு பயணித்தது இன்றும் மறக்கவில்லையடி. கடந்தது சிறு தொலைவுதான், ஆனால் பல காலங்கள் தொடர்கின்றது உந்தன் நினைவுகளாக... இந்தனை இன்பங்களில் ஒன்றாய் பயணித்த நாம், இறப்பில் மட்டும் தனியாய் சென்றது சரியா... உன்னோடு இறப்பதும் சுகம்தான் என்பதை ஏன்னடி நீ மறந்தாய்..
அன்பான தோழியடி நீ, உன்னை நினைக்காத நாள் இல்லையடி, கல்லூரி வாழ்க்கையில் கடைசிவரை தோழியாய் இருந்தவள் நீயடி, உன் அன்பான சிரிப்பினில் அனைவரையும் அன்பாக மாற்றியவள் நீயடி. தந்தையிடம் பயத்தையும், தாயின் பாசத்தையும் கொண்டவள் நீயடி.
Image
பேச எதுவும் இல்லையென்றாலும், எங்களின் பேச்சுமட்டும் குறைவதும்மில்லை.. "அப்பறம்" என்ற ஒரு வார்த்தையில் தொடர்கிறது எங்களின் பேச்சு.
Image
காதல் வாய்த்த தருணத்தில், காதலை கூர தயங்கிய காரணத்தால், இன்று தாரம்மாணப்பின், இடைவிடாமல் கூர வைத்துவிட்டாள்... நான் உன்னை காதலிக்கிறேன் என்று.
Image
நண்பா, வெட்டியாய் முறைத்துக்கொண்டாலும் , விளையாட்டாய் அடித்துக்கொண்டாலும், உனக்கொரு வேதனை என்றதும், எதிரில் வரும் பேருந்தையும் மறந்துவிட்டு, உன்னை காண கால்கள் விரைகின்றது. 
Image
இடைவிடாமல் பேசிக்கொன்றவள் - அவளின் இடையைப்பற்றி பேசியதும் நாணம் கொள்கிறாள். ஐயோ..! அவளின் நாணமும் பேசிக்கொல்கிறதே.     
Image
வாழ்வில் முதல்முறையாக கன கலைந்ததற்க்காக கவலை கொள்கிறேன், அக்கனவில் நீ வந்ததால்.
Image
முடித்த காதல் மீண்டும் மலர்கிறதே..! நிஜத்தினில் இல்லை, உந்தன் நினைவினில்..