எங்குதான் சென்றாயோ..! எதற்காக புதைந்தாயோ ..! என் இதயத்தில்-இடம் பத்தவில்லையென்று இம்மண்ணில் புதைந்தாயோ ..? என்முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லை என்பதால், மண்ணால் உன்முகத்தை மூடிக்கொண்டாயோ..? மரணிக்கும் தருவாயில்கூட இந்த மதிகெட்டவனின் நினைப்பு உனக்கு வரவில்லையா..? போகும்முன் ஒரு பார்வை பார்த்திருந்தால், உனக்கு துணையாய், உன்னுடன் வந்துதிருப்பேன், என்பதை மறந்து சென்றாயோ ? எவ்வழி சென்றாயோ, வழியறியாமல் தவிக்குறேன். வழிகாட்ட நீ வருவாயா..? உன்விரல் பற்றிக்கொண்டு நானும் வருகிறேன் மகிழ்ச்சியாய். தனிமையில் தவிக்குறேன். தெரியவில்லையா உனக்கு, விரைந்து வா.. சேர்ந்தே போகலாம்..