Posts

Showing posts from November, 2018
Image
பிரியமானவளே உன்னை நினைக்கும் போதெல்லாம் உண்ண மறந்துவிடுகிறேன். உந்தன் நினைவினில்- நான் என்னை மறப்பதினால்.
Image
அடியே.., என்னெதிரில்  நீ இருந்த தருணங்களில், என் இமைகூட இமைக்க மறுத்ததடி, என் விழித்திரையில் நீ இருந்ததால்- பிறகு என் இதயம் மட்டும் எப்படி மறக்கும், உன்னுடன் இருந்த நினைவுகளை..!

தனிமையில் ஓர் பயணம்

Image
அவள் நடந்த பாதையில் அடிமேல் அடிவைத்து நடக்கிறேன் - வாழ்வில், அவளுடன் சேர முடியவில்லை என்றாலும், அவளின் பாதச் சுவடுகளுடனாவ‌து சேரட்டுமே என்பதற்காக..!

அன்பானவர்கள் மீது, இரக்கம் காட்டாதே

Image
உன்னால் ஏற்படுத்தப்படும் சிறு மனக்காயங்கள், மற்றவரின் வாழ்க்கையை  அழகாக மாற்றும் என்றால், அவர்கள்மீது இரக்கம் காட்டாதே.. அக்காயத்தை துணிந்து செய் தயங்காதே ..!

அவளின் கல்லறையின் முன்

Image
நீ இல்லா தருணத்தில், நொடிபொழுதும் நரகமாய் உணருகிறேன்னடி. இதுவரை 24 மணிநேரமும் உன்னுடன் கழித்துவிட்டேன்- ஆனால் இப்போது எப்படி கழிப்பதென்று தெரியலடி. தினமும் காலையில் உந்தன் பதிவுகளை கண்ட என் விழிகள் - இன்றும் என்னை அறியாமல் என்கைகளும் கைபேசியை தேடுதடி.     உன்னால் இடைவிடாமல் சினுங்கிய என் செல்போனும் கேக்குதடி,  நீ எங்கே என்று. எப்படி சொல்வேன்னடி உனக்கு தொல்லை தர அவள் இன்று இல்லையென்று. உன்னக்காக நான் எழுதிய சிறுகிறுக்கல்களும் தெரியாதடி, இனி அதை படிக்க இங்கே நீ இல்லையென்பது. உனக்காக நான் தேடி தேடி வைத்த காதல் பதிவுகளும், என்னை கைகொட்டி சிரிக்குதடி - நீ பார்க்கவில்லையா என்று. உன்னை மறந்துவிடு வேலையை பாரென்று சொல்லும் என் நண்பர்களுக்கு எப்படி நீ சொல்லுவேன், பார்க்கும் இடமெல்லாம் உந்தன் நினைவுகளென்று. நீ இல்லை என்றறிந்த என் மனம்கூட நம்ப மாறுகின்றன. இன்றும் எங்கு செல்போன் சினுங்கினாலும் நீதானோ என்று நினைக்குதடி. தினமும் உன்முகம் பார்த்தே பழகிவிட்டேன். இன்று உன்முகம் எங்கு சென்று பார்ப்பேனடி நீ அழைக்க மாட்டாய் என்றறிந்தும்...