கனவிலும் கூட
என்னவளை பிரியாமல்,
ஆனந்தமாய்  நான்
துயில,
சின்னதொரு ஜன்னலில்
செல்லமாய் கதிரவனும்
எட்டிப் பார்க்க,
விடிந்ததென்று தெரியாமல்
உந்தன் கனவும் நீளுதடி.

என் கனாவை
கலைக்க வந்த அந்த
கதிரவனை
வசைப்பாடி- இமை
திறக்க மனமில்லாமல்
கோபத்துடன் நானிருக்க,

கனவினில் கண்டவள்
கண்ணெதிரில் தூங்குகிறாள்
இமைகளை திறவென்று - அந்த
ஆதவனும்  அதட்டுகின்றான் .

என்னவளை
கண்ட கனாவினை,
கலைக்க மனமில்லாமல்,
மெல்லமாய் என்
விழி திறக்க,

சிறு சிரிப்புடன்
தேவதை அவளோ,
தூங்குகிறாள்.

இச்சிரிப்பினில்
காரணமாயிரம்
புதைந்திருக்க
அதில் எதுவென்று
நான் அறிவேனடி!

தேவதை உன்னை
ரசித்தப்படி,
உன் அருகில் நான்
படுத்திருக்க,
என்னை அதட்டிய  அந்த
ஆதவன்,
உன்னை மட்டும்
விட்டு விடுவானா என்ன!

அரையடி இடைவெளியில்
அழகாய் நீ துயிலுறங்க - அதை
கலைக்க மனமும் தயங்குதடி.
உந்தன் தலைமுடி மோதலும்
உன்கனவை  கலைக்குமென,
என் விரலால் அதை வருடி
உன் காதோரத்தில்
ஒதுக்கிவிட,

எந்தன் விரல் மோதலில்
அந்த அரையடி இடைவெளியும்
தொலைத்துவிட்டு- என்னை
இறுக்கி அணைத்து
கொள்வாயடி.

"என் செல்லமே"
என்று சொல்லிக்கொண்டு
உன் நெற்றியில் நான்
முத்தமிட,
சிறு புன்னகையுடன்
உன் இமையை நீ திறந்து
"ஐ  லவ் யூ டா மாமா"
என்று சொல்லி,
இனிதாய் தொடங்குகிறது
நம் பொழுது.





Comments

Post a Comment

Popular posts from this blog