அவளின் கல்லறையின் முன்

நீ இல்லா தருணத்தில்,
நொடிபொழுதும்
நரகமாய் உணருகிறேன்னடி.

இதுவரை
24 மணிநேரமும் உன்னுடன்
கழித்துவிட்டேன்- ஆனால்
இப்போது எப்படி கழிப்பதென்று
தெரியலடி.

தினமும் காலையில்
உந்தன் பதிவுகளை கண்ட
என் விழிகள் - இன்றும்
என்னை அறியாமல் என்கைகளும்
கைபேசியை தேடுதடி.
   
உன்னால்
இடைவிடாமல் சினுங்கிய
என் செல்போனும் கேக்குதடி,
 நீ எங்கே என்று.
எப்படி சொல்வேன்னடி
உனக்கு தொல்லை தர
அவள் இன்று இல்லையென்று.

உன்னக்காக நான் எழுதிய
சிறுகிறுக்கல்களும் தெரியாதடி,
இனி அதை படிக்க
இங்கே நீ இல்லையென்பது.

உனக்காக நான் தேடி தேடி
வைத்த காதல் பதிவுகளும்,
என்னை கைகொட்டி
சிரிக்குதடி - நீ
பார்க்கவில்லையா என்று.

உன்னை மறந்துவிடு வேலையை பாரென்று
சொல்லும் என் நண்பர்களுக்கு
எப்படி நீ சொல்லுவேன்,
பார்க்கும் இடமெல்லாம்
உந்தன் நினைவுகளென்று.

நீ இல்லை என்றறிந்த
என் மனம்கூட நம்ப மாறுகின்றன.
இன்றும்
எங்கு செல்போன்
சினுங்கினாலும்
நீதானோ என்று நினைக்குதடி.

தினமும் உன்முகம்
பார்த்தே பழகிவிட்டேன்.
இன்று உன்முகம்
எங்கு சென்று பார்ப்பேனடி

நீ அழைக்க மாட்டாய்
என்றறிந்தும், என் கண்கள்
செல்போன்னையே பார்த்து
ஏங்குதடி.

யாரு சாப்பிட்டாயா என்றாலும் ,
கண்களில் அருவியாய் நிக்குதடி
உன் நினைப்பு..
எப்படியடி
ஒரு வாய் சோறும் எறங்கும்மடி

நாம் பயணித்த அந்த சாலையில்
இன்று பலமுறை நின்று
அழுகிறேன்
நீ திருப்பி வரமாட்டாயா என்று.

உன்னோடு நடத்த போது
நெடுதூரமும்,
தூரமாய் தெரியலடி- இன்று
அதில் ஓரடி கடக்க
ஒரு ஜென்மம் பத்தலடி.

உன்னை இடைவிடாமல்
சிரிக்க வைததால்தானோ.
உன்னை நினைக்கும் போதெல்லாம்
அழ வைக்குறாயோ ..?
போதுமடி நீ தந்த வலி
திரும்பி வா என்னுயிரே .

உன்மேல் நான்கொண்ட
காதலால்தானோ - இன்று
நீ என்னை இம்மண்ணில்
விட்டுசென்றாயோ ?
உன்னை நானே கொன்றுவிட்டேன்னாடி.
அதனால்தானோ என்முகம்
பார்க்க கூடாதென்று
சொல்லாமல் மண்ணுக்குள் சென்றாயோ ?

நான் உன்னை காதலித்ததிற்காக ,
நீ என்னை விட்டு சென்றுவிட்டாய்.
நீ என்னை காதலித்ததற்க்கு
நான் என்ன செய்வதடி
நானும் வருகிறேன்
உனக்கு துணையாய். 

Comments

Popular posts from this blog